ஐடியா - கொடிசுவரன் ஆக நல்ல ஐடியா .
கோடிசுவரர் ஆகுவது எப்படி ? அப்படின்னு புக் எழுதலாம்னு பல நாளா யோசனை, ஆனா அதுக்கு மொதல்ல நாம கோடி கோடியா சம்பாதிகனுமே? என்ன பண்ணலாம்னு யோசிச்சா நம்ம ஊர் பக்கம் ஒன்னு அரசியல்வாதியா இருக்கோணும், இல்ல சினிமால இருக்கோணும். ரெண்டுமே நமக்கு ஆகாது. ஏன்னு கேட்டா அப்புறம் சொல்றேன்.
நமக்கு இப்போ கோடி தான் முக்கியம். அப்போ தான் இந்தோனேசிய கார் டிரைவர்கிட்ட பேச சந்தர்ப்பம் கிடைச்சிசு, அவரு சம்பளத கேட்டவுடனே தல ஒரு ரவுண்டு சுத்திதான் நின்னுச்சி.
அவரு சம்பளம் 30 லட்சம் என்னடா ன்னு பார்த்தா நம்ம ஊரு பணத்துல 15000 ரூபாய். அப்புறம் கூக்லேலாண்டவர் கிட்ட போய் விசாரிச்சிட்டு ஒரு முடிவு பண்ணிருக்கேன், என்னன்னா பேசாம இங்க இருக்குற வேலைய விட்டுட்டு ஜிம்பாப்வே நாட்டுக்கு போயிரலாம் ஏன்னா 1 ரூபா அங்க கிட்டத்தட்ட 28 கோடி டாலராம், அப்ப நாம எப்படியும் கோடிசுவரர் தானே. அதனால தான் சொல்றேன் நம்ம அங்காளி பங்காளி எல்லாம் வாங்க நாம அங்க போயி கோடிசுவரர் வாழ்க்கை வாழலாம்.
என்னது அங்க அரசியல் ஸ்திர தன்மை இல்லையா ? அட போங்க சார் இங்க மட்டும் இருக்க என்ன ? இங்க நாம நூறுக்கும் ஆயிரத்துக்கும் லோ லோன்னு அலையிறோம், இதுல என்னடான்னா இவரு இப்படி தெனாவட்டா அறிக்கை விடறார் "சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கிகளின் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பண விவரங்களை வெளியிட முடியாது. இதற்கென சட்ட நடைமுறைகள் இல்லாததே காரணம்,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்."
அந்த பணத்தோட மதிப்பு சரியா யாரும் சொல்லலையாம். உலக நிதி அமைப்பு 20.8 லட்சம் கோடி ந்குதாம்,, பி ஜே பி 60 லட்சம் கோடி ந்குதாம்,, இவருக்கு அதனால ஒரே கொழப்பமாம் அதனால ஒன்னும் செய்ய முடியாதாம்.
ந்கொய்யா என்னமா சமாளிகுறார், யாரு அப்பன் வீடு பணம்? இதுல சட்டத்துல எடம் இல்லையாம், எடம் இல்லைனா உருவாக்க வேண்டியதுதானே, கொள்ளை அடிக்க மட்டும் சட்டத்துல எடம் இருக்கா என்ன ? அத நாம செய்யல ?
இதுல உடனடி தீர்வு கிடைக்காதாம் ? ஏனா இது நாங்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பல ஆட்சி காலத்துல சேர்த்த பணம் இல்லையா ? அத எல்லாம் வேற புது வழி கண்டுபுடிச்சி பதுகிட்டு அப்புறமா இத பத்தி யோசிப்போம்.
அட போங்க சார் இவிங்க எப்போதுமே எப்படித்தான் நாட்டுக்கு பண்ணாம இருக்க கோடி வழி கண்டுபிடிபாணுக. நாம கிளம்பி போயி கோடிசுவரன் ஆகலாம் வாங்க.....
No comments:
Post a Comment